தலைத் தெறிக்க இடது பக்கம் ஓடிய லஞ்ச ஒழிப்புத்துறை வலது பக்கம் ஓடிய சார்பதிவாளர்
தேனி மாவட்டம் போடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் நடைபெற்ற லஞ்ச் ஒழிப்புத்துறை சோதனையில் எந்த பதிலும் அளிக்காமல் அலுவலகத்தை மூடாமல் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு
தேனி மாவட்டம் போடி பேருந்து நிலையம் அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நண்பகல் மூன்று மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
50க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்வதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தின் நுழைவுவாயிலை பூட்டி பொதுமக்களின் செல்போன் ஆவணங்களை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் சார்பதிவாளர் அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் சோதனை நிறைவடைந்து இரவு 11 மணி அளவில் அலுவலக ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ச்சியாக சார் பதிவாளரிடம் மட்டும் விசாரணியில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாலை இரண்டு மணி அளவில் யாரிடமும் எந்த தகவலும் சொல்லாமல் அவசர அவசரமாக வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
அதே நொடியில் சார்பதிவாளர் கார்த்திகை ராஜா அலுவலகத்தை பூட்டாமலே தலைத் தெறிக்க ஓடி இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றார்.தொடர்ச்சியாக 10 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இடது பக்கம் லஞ்ச் ஒழிப்புத்துறையினரும் வலது பக்கம் சார்பதிவாளரும் ஓடி சென்ற நிகழ்வு போடி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 20 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது


