தவெக அரசு தேர்தல் வாக்குறுதான் விவசாய கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி
தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
“தமிழக அரசே தமிழக அரசே விவசாய கடன்களை ரத்து செய் என்கிற பதாகைகளுடன் ஊர்வலமாக வருகை தந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனை எடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 4 விவசாயிகளை மட்டும் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு அனுமதித்தனர்
பின் கூட்டுறவு சங்கச் செயலாளரிடம் விவசாயிகளின் கடன்களை எந்தவித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்


