சொத்து தகராறில் வீடு சூறையாடல்: 8 பேர் மீது வழக்கு
சொத்துக்காக வீட்டை சூறையாடிய நபர்கள் தஞ்சை கிழக்கு போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை.
தஞ்சை ஆட்டுக்கார தெரு மானம்புச்சாடி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தங்கை மகாலட்சுமிக்கும் கோபாலுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 40 வருடத்திற்கும் மேலாக இந்த பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சொத்திற்கு வாரிசுதாரர்கள் யாரும் இல்லாததால் இருதரப்பினரும் உரிமை கோர இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்து கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கில் மகாலட்சுமிக்கு இந்த சொத்து சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது பின்பு மகாலட்சுமி அந்த வீட்டை பூட்ட வேண்டும் இது எங்களுக்கு சொந்தமான சொத்து என கோபாலை வெளியே போக சொல்லியுள்ளார்.
ஆனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கோபாலை வெளியேற்ற வேண்டாம் வெளியேற்றினால் அவர் எங்கே போவார் என சமாதானப்படுத்தி அவரை வீட்டில் உள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் கோபால் பல்வேறு காரணம் சொல்லி நீண்ட காலமாக அந்த வீட்டை ஆக்கிரமித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி, அண்ணாதுரை மற்றும் தனக்கு சொந்தமானவர்களை வைத்துக்கொண்டு வீட்டை பட்டப் பகலில் உடைத்து வீட்டின் மேல் கூரை ஓடு உள்ளிட்டவைகளை பிரித்து வீசினர்.
பட்ட பகலில் ஆட்களை வைத்து ஒரு வீட்டையே சூராடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை எடுத்து தஞ்சை கிழக்கு போலிசார் அண்ணாதுரை உள்ளிட்ட எட்டு பேர் மீது எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு தற்போது வரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மீதமுள்ள ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


