in

தஞ்சை பெரியக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திரா மாநில பக்தர்களை கதண்டு கடித்ததில் 4 பேர மயக்கம் அடைந்தனர்

தஞ்சை பெரியக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திரா மாநில பக்தர்களை கதண்டு கடித்ததில் 4 பேர மயக்கம் அடைந்தனர்

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவில் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது

இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் அழகை காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது பெரியக் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெறுவதால் வராஹி அம்மனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கூடி உள்ளனர் யாகம் நடைபெறும் போது வெளியேறிய புகையால் கோவிலில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் பறக்க தொடங்கின அந்த இடத்தில் நின்று இருந்தவர்களை கதண்டு கடித்ததால் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

தலையில் துணியால் போர்த்தியபடி முகத்தை மறைத்து கொண்டு ஓடினர்.

கதண்டு கடித்ததில் ஆந்திரா மாநிலம் உத்தமநல்லூர் பகுதியை சேர்ந்த நாராயணன் ஹேமாவதி சுபலட்சுமி உள்ளிட்ட 4 பேர் மயக்கம் அடைந்தனர் மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

What do you think?

*புதுச்சேரி…நீட் விவகாரம்…ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர்.குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீசார்..*

நீட் ரத்து கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போராட்டம்; 50-க்கும் மேற்பட்டோர் கைது