in

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: 11 மாத ஒப்பந்த நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயபாரதி, மாநில இணைச் செயலாளர் ராம்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான செவிலியர்கள் பங்கேற்றனர்.

​மாதம் ₹21,000 தொகுப்பூதியத்தில் 4,724 செவிலியர்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும்.
​கடந்த மூன்றரை ஆண்டுகளாகக் காலியாக உள்ள பணியிடங்களை MRB மூலம் முறைப்படி நிரந்தரமாக நிரப்ப வேண்டும்.

​கரோனா காலத்தில் பணியாற்றிப் பணிநீக்கம் செய்யப்பட்ட 2,500 செவிலியர்களுக்கு மீண்டும் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
​மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான பணிச்சுமையைத் தவிர்க்கப் போதிய நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

​இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குத் தீவிரப்படுத்தப் போவதாகச் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

What do you think?

புரட்டாசி மாத பிறப்பு வெள்ளிகவச பெருமாள்

21 தியாகிகளுக்கு வன்னியர் சங்கத்தினர் அஞ்சலி