in

தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவ மாணவிகள் சாலை மறியல்

தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவ மாணவிகள் சாலை மறியல்

 

தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரை கண்டித்தும், நீட் வினாத்தாள் வெளியானதில் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரியும் தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கம் மற்றம் ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றினர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

What do you think?

குத்தாலம் ராஜகாளியம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு திருநடன உற்சவம்

கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்