குத்தாலம் ராஜகாளியம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு திருநடன உற்சவம்
குத்தாலம் ராஜகாளியம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு திருநடன உற்சவம் பக்தர்கள் வீடுகள் தோறும் பழங்கள் மாவிளக்கு தீபமிட்டு மாலை அணிவித்து வழிபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருத்துருத்தி என்னும் குத்தாலம் ராஜகாளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகாளியம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு திருநடன உற்சவம் இன்று வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது முன்னதாக ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பிறந்த இடத்திற்குச் சென்றது.
பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தோப்பு தெரு ருத்ராபதியார் ஆலயத்தில் சென்று மாலை நிறைவு பெற்றது.

இந்த திருநடன உற்சவம் ஒன்பது நாட்கள் நடைபெறும் தினமும் ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் புறப்பட்டு அந்தந்த பகுதிகளில் திருநடன உற்சவம் நடைபெறும் ஒன்பதாம் நாள் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து திருநடன உற்சவம் பந்தல் காட்சியுடன் நிறைவு பெறும் பக்தர்கள் வீடுகள் தோறும் பழங்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி ராஜகாளியம்மனுக்கு புடவை சாற்றி, மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.
ராஜகாளியம்மன் திருநடனத்தின் போது சூலம் தீச்சட்டி கையில் வைத்து திருநடனம் ஆடியது காண்போரை பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது தொடர்ந்து மகுடி ஆட்டம் கும்மியாட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வந்து திருநடன உற்சவத்தை கண்டு கழித்து அம்பாலின் அருளை பெற்றுச் சென்றனர்.


