காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்ட நிலையிலும் சக்கர நாற்காலியில் வந்து கலைஞர் பிறந்த நாளை கொண்டடினர்
திமுக தலைவராகவும், முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பிலும் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளரான டாக்டர் மனோகர் கால் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக தகடு பொருத்தி சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்கள் நடக்கக்கூடாது என அறிவுறுத்தி இருந்த போதிலும் ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் சக்கர நாற்காலியில் வந்து கலைஞர் பிறந்த நாளை கொண்டாடினார்.
காரில் வந்த அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு சிதம்பரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு வந்த அவர், மண்டல பொருளாளர் செந்தில்வேலன், செயலாளர் நற்குணன் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே திமுக கொடியினை ஏற்றி வைத்து, அங்கிருந்த பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள செம்மை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முதியோர் இல்லத்திற்கு சென்ற ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் அங்குள்ள முதியோர்களுக்கு பழங்களை வழங்கினார்.
பின்னர் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதியோர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
உடல் முடியாமல் அறுவை சிகிச்சை செய்த நிலையிலும், ஒன்றிய செயலாளர் சக்க நாற்காலியில் வந்து கலைஞர் பிறந்தநாளை கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்கியதை பார்த்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள், இதுபோன்ற களம் காணும் தீரர்கள் இருக்கும் வரை திமுகவிற்கு என்றைக்கும் தோல்வியே இல்லை என பெருமிதம் அடைந்தனர்.


