திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் தென்றல் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகங்கள் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் மாவட்ட ஆட்சியர் வளாகம் போன்ற பல்வேறு இடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு பகுதிகளை சுற்றியும் குடியிருப்புகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து வந்தனர். இன்று காலை அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக வந்த தகவல் யார் அனுப்பியது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சற்று பரபரப்பாக உள்ளது.


