புனித பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு தேர்பவனி திருவிழா
குத்தாலம் அருகே கீழகருப்பூர் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு தேர்பவனி திருவிழா. விடிய விடிய நடைபெற்ற தேர்பவனி சிறப்பு திருப்பலியுடன் நிறைவடைந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கீழகருப்பூர் கிராமத்தில்
புனித பெரியநாயகி அன்னை தேவாலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் ஆண்டு தேர்பவனி திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்த இரவு பேண்ட் வாத்தியம் இசை நிகழ்ச்சியுடன் வாணவேடிக்கைகள் முழங்க மலர் மற்றும் மின் அலங்காரத்துடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருதேரில் புனித பெரியநாயகி, புனித அந்தோணியார், சூசையப்பர், சவேரியார், சம்மனசு ஆகியோர் எழுந்தருளி கிராம மக்களுக்கு காட்சி கொடுத்தனர்.

ஆலயத்தில் துவங்கி கிராமம் முழுவதும் வலம் வந்த தேர்பவனி திருவிழாவில் இறைமக்கள் தங்கள் வீடுகள் தோறும் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி வழிபாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து குத்தாலம் பங்குத் தந்தை சேவியர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்று கொடி இறக்கத்துடன் ஆண்டு தேர்பவனி திருவிழா நிறைவடைந்தது.
விழாவில் கீழகருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றனர்.


