பொதுமக்களுக்கு காலை உணவு இனிப்புகளுடன் அன்னதானம்
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளால் தினமும் இலவசமாக பொதுமக்களுக்கு காலை உணவு இனிப்புகளுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு தினமும் காலை உணவு அன்னதானம் இலவசமாக பொதுமக்களுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இன்று மயிலாடுதுறை நகர செயலாளர் ராஜ்குமார் வழிகாட்டுதலுடன் 22 ஆவது வார்டு செயலாளர் கில்லி ஐயப்பன், வார்டு இணைச் செயலாளர் பிரவீன், வார்டு துணை செயலாளர் அபிலாஷ், வார்டு பொருளாளர் பாரத் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு காலை உணவுகள் மற்றும் இனிப்புகளுடன் அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர தவேக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

