in

தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

 

மயிலாடுதுறையில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்த நிலையில் இதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் தமிழ்நாடு அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும், கரூரில் உயிரிழந்த 41 பேருக்கும், ஈரான் கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் சவூதி அரேபியாவில் உயிரிழந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மாவீரன் மற்றும் சங்கர் ஆகியோருக்கும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோபிநாத் சிறப்புரையாற்றினார்.

அப்போது, தமிழக அரசின் கடந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள், அரசின் சாதனைகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் ‌மற்றும் தொண்டர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

ஷோரூம் முன் பைக்கை தீவைக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு