ஷோரூம் முன் பைக்கை தீவைக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு
3 மாதத்தில் 30 முறை பழுது: ஷோரூம் முன் பைக்கை தீவைக்க முயன்ற இளைஞரால் நாகையில் பரபரப்பு;
நாகப்பட்டினம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த பிளம்பர் சதீஷ், நாகூர் கிழக்குச் சாலையில் உள்ள தனியார் ஷோரூமில் 3 மாதங்களுக்கு முன்பு ₹1.78 லட்சம் மதிப்பில் தவணை முறையில் புதிய இரண்டு சக்கர வாகனம் வாங்கினார்.
வாகனம் வாங்கிய முதல் நாளிலிருந்தே அடிக்கடி வழியிலேயே நின்றுபோவது, சாவி போடாமலே ஆன் ஆவது போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
3 மாதங்களில் சுமார் 30 முறை பழுதுநீக்கச் சென்றும் பிரச்சனை தீரவில்லை. இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான சதீஷ், வாகனத்தை மாற்றித் தருமாறு கேட்க ஷோரூமிற்கு வந்துள்ளார்.

அங்கு மேலாளர் மற்றும் உரிமையாளர் இல்லாததால், வாகனத்தை மாற்றித் தர ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பெட்ரோல் டேங்கை திறந்து தீப்பெட்டியால் பைக்கை கொளுத்த முயன்றார்.
அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக அவரைத் தடுத்துப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

