in

குழந்தைகளைக் கண்டு கண்கலங்கி அழுத கீழ்வேளூர் எம்எல்ஏ!

குழந்தைகளைக் கண்டு கண்கலங்கி அழுத கீழ்வேளூர் எம்எல்ஏ!

 

சுதந்திர தின விழா: ஆதரவற்ற பச்சிளம் குழந்தைகளைக் கண்டு கண்கலங்கி அழுத கீழ்வேளூர் எம்எல்ஏ!

​நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் ‘மனோலாயம்’ சிறப்பு தத்து வள மையம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

​இவ்விழாவில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி. லதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

​​கொடியேற்ற நிகழ்விற்குப் பிறகு, பராமரிப்பு மையத்தைப் பார்வையிட்ட எம்எல்ஏ லதா, அங்குப் பராமரிக்கப்பட்டு வரும் பச்சிளம் குழந்தைகளைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டார். தாய், தந்தை இல்லாத நிலையில் வளர்ந்து வரும் அக்குழந்தைகளைக் கைகளில் ஏந்திக் கொஞ்சியபோது, அவரால் துக்கம் தாளாமல் கண்களில் நீர் வழிந்தது.

​”இந்தக் குழந்தைகளுக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் நிச்சயமாகச் செய்து தருவேன். இவர்களை மிகவும் கவனத்துடனும் பார்த்துக் கொள்ளுங்கள் .”
எம்எல்ஏ டி. லதா (மைய ஊழியர்களிடம் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டார்)

​ஆதரவற்ற பச்சிளம் குழந்தைகளைப் பார்த்து மக்கள் பிரதிநிதி ஒருவர் மனம் உருகிக் கண்ணீர் சிந்திய நிகழ்வு, அங்கிருந்த அனைவரது கண்களையும் குளமாக்கியதுடன் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

What do you think?

“கர்நாடகாவை விட்டே விரட்டுவோம்!” – யாஷிற்கு அதிரடி எச்சரிக்கை!

நெய்வேலியில் 33-ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா – ஆலோசனை கூட்டம்