in

தல அஜித்தை குற்றம் சாட்டிய… விமர்சகர் அந்தணன்

தல அஜித்தை குற்றம் சாட்டிய… விமர்சகர் அந்தணன்

 

தமிழ் படங்களிலேயே நடித்துக் கொண்டு,, தமிழ் சினிமாத்துறையை அவமதிப்பதா? தல அஜித்தை குற்றம் சாட்டிய… விமர்சகர் அந்தணன்

தன்னை பற்றி எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தலையை சிலுப்பி கொண்டு நான் தல ..டா என்று கெத்தாக கூறுபவர் தல அஜித்.

எப்பொழுதுமே அடுத்தவர்கள் வேலையில் தலையிடாமல் நடிப்பது மட்டும் தன் வேலை என்று சைலன்டாக செல்பவர் அஜித். அவருடைய இந்த போக்கை கண்டித்து அந்தணன் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகிவருகிறது.

ஆவது தமிழ் சினிமாவிலேயே இருந்து கொண்டு தமிழ் படங்களிலேயே நடித்துக் கொண்டு தமிழ் படம் முலம் சம்பாதித்து உச்சத்தில் இருக்கும் இவர், தமிழ் Industry…யை மதிக்க மாட்டேன், தமிழ் ரசிகர்களை மதிக்க மாட்டேன், என்று கூறுவது நியாயம் அல்ல.

அதனால் எல்லோரும் அஜித்தை புறக்கணிப்போம் என்று அந்தணன் கூறியுள்ளார். அவர் நடவடிக்கையை திருத்துவது என்னுடைய கடமை என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் அஜித் ஒருமுறை தனது பேட்டியில் கூறியதாவது ஒருவர் அவரவர் கடமை சரியாக செய்தாலே போதும் யாருக்கும் பயப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அந்தணன் கொடுத்த பதிலாவது நீங்கள் முதலில் உங்கள் கடமையை செய்தீர்களா எந்த படத்தில் ஆவது டை அடித்துக் கொண்டு நடிக்கிறீர்களா, இயக்குனர் தான் கதை எழுதும்போது தன்னுடைய கதாநாயகன் படத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து தான் கதை எழுதுகிறார்கள்.

அந்த மாதிரியான உடையை என்றைக்காவது நீங்கள் அணிந்திருக்கிறீர்களா இயக்குனர்களுக்கு நீங்கள் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களா நீங்கள் எப்படி கடமை பற்றி பேசுகிறீர்கள் என காரசாரமாக கேட்டுள்ளார்.

மேலும் நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்த பொழுது நடிகர் சங்க ஒரு கடனை அடைப்பதற்காகவும், நலிந்த கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் அவர் சினிமா துறைக்கு நிறைய செய்திருக்கிறார். அப்படிப்பட்ட மனிதர் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துவது இவருடைய கடமை அல்லவா அதற்காகவாவது வந்தாரா அல்லது அஜித்தின் எந்த பேட்டியிலாவது இவர்கள் தான் என்னை வளர்த்து விட்டார்கள் என்று யாருடைய பெயரையும் குறிப்பிட்டது கிடையாது.

டைரக்டர் எஸ் ஜே சூர்யா, ஏ ஆர் முருகதாஸ் இவர்கள்தான் அஜித்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்கள் ஆனால் அவர்களைப் பற்றி அவர் எங்கும் குறிப்பிட்டதில்லை ரஜினி, கமல் இன்று வரை தன்னை வளர்த்து விட்ட பாலச்சந்தரை தன் குருநாதர் என்று மறக்காமல் எல்லா இடத்திலும் குறிப்பிட்டு கூறுவார்கள்.

அஜித்தின் உற்ற நண்பரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அவருடன் பல படங்களில் பணியாற்றியவர் அவர் இறப்புக்கு கூட அவர் வரவில்லை இப்படிப்பட்ட நபரை நாம் எப்படி மதிப்பது அவரை எப்படி எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கடமையை பற்றி பேசும் தகுதி அஜித்துக்கு இருக்கிறதா எந்த ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்கும் அவர் வருவதில்லை (நயன்தாராவும் வருவதில்லை அதை குறிப்பிட அந்தணன் சார் மறந்துவிட்டார் போல)…என்ற, கொள்கை வைத்து கொண்டிருக்கும் இவரை நாம் கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும் என்று அந்தணன் கூறிய பேட்டி சமூக வலைதளங்களில் தல ரசிகர்ளிடையே வெடித்துக் கொண்டிருக்கிறது.

What do you think?

இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இரண்டே பேர்… அப்பாவின் பெயரை சொல்லலியே …

தெலுங்கு நடிகர்களை கிழிதெடுத்த ராதிகா ஆப்தே