மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி முருகன் கோவிலில் வைகாசி சதய திருவிழா தேரோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்;ளது பிரசித்தி பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகமாகவும், சோழநாட்டு திருச்செந்தூர் என்றும் போற்றப்படுகிறது.
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் மாயையால் தப்பி தரங்கம்பாடி கடல் பகுதியில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசூரனை வதம் செய்து ஏற்பட்ட சாப தோஷம் நீங்க திருவிடைக்கழி தலத்தில் முருகப்பெருமான் சிவனை பூஜித்து தனக்கு ஏற்பட்ட சாபதோஷம் நீங்க பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது.
அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றிப் புகழப்பட்டுள்ள இக்கோவில் கருவருறையில் முருக பெருமானும், சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே திருத்தலமாகும். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால் முருக பெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார்.
சிறப்புமிக்க இக்கோயிலில் வைகாசி சதய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் விழா நடைபெற்று வருகிறது இந்நிலையில் முக்கிய நிகழ்வாக கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது கோவிலில் முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்க சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்று.
கோவிலை வலம் வந்து பின்னர் தேரில் சிறப்பு அலங்காரத்தில் சோமாஸ்கந்தர் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் நான்கு வீதிகள் வழியாக தேர் நிலையை அடைந்தது இதில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் செயல் அலுவலர் பிரேம்குமார் பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் ஆய்வாளர் பத்ரிநாத் கோயில் குருக்கள் நந்தகுமார் , ராஜேஷ் மற்றும் ஊர் மக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் வழிபாடு செய்தனர்.


