in

பிரிந்து சென்ற மனைவியினை கண்டித்த கணவர் மாமனார் – காவல் துறை உயர் அதிகாரிகொலை மிரட்டல் விடுத்ததால்

பிரிந்து சென்ற மனைவியினை கண்டித்த கணவர் மாமனார் – காவல் துறை உயர் அதிகாரிகொலை மிரட்டல் விடுத்ததால்

தேனி அல்லிநகரம் அருகே வள்ளிநகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் இவரின் மகன் ஈஸ்வரனுக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருவருக்கும் குழந்தை உள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் ஈஸ்வரணின் மனைவிக்கும் அவரது உறவினரான திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராமு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது மேலும் ஈஸ்வரனின் தாய், தந்தை அவர்களின் மருமகளை கண்டித்ததாக கூறப்படுகிறது

 

இந்த நிலையில் தனது மருமகளை கண்டித்த நடராஜன் மற்றும் ஈஸ்வரனுக்கு ராமு மற்றும் மனைவியின் சகோதரர் சிவா ஆகியோர் செல்போன் மூலம் ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

இது குறித்து அல்லிநகர காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமு மற்றும் மனைவியின் சகோதரர் சிவா ஆகியோர் மீது கடந்த மாதம் 18ஆம் தேதி நடராஜன் புகார் அளித்த நிலையில்

ராமு மீது புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நடராஜன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்

எனவே தனது மருமகளின் போக்கை கண்டித்த தன்னையும் தன் குடும்பத்தையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த காவல் துறையில் உயர் பொருப்பில் உள்ள ராமு அவருடைய உறவினர் சிவா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

What do you think?

செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி முருகன் கோவிலில் வைகாசி சதய திருவிழா தேரோட்டம்