பழனி கோயில் நில மோசடி: சார் பதிவாளர் மீது நடவடிக்கை கோரி புகார்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பால விஜய், இவர் தற்போது காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார்
மேல்மங்கலம் கிராமத்தில் பாலவிஜய்க்கு சொந்தமான சுமார் 1ஏக்கர் வீடு மற்றும் நிலத்தினை கட்ட தேவன் என்பவர் பராமரித்து வந்தார்
இந்த நிலையில் பாலவிஜய் தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்காக முயற்சித்த போது கட்ட தேவன் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து பாலவிஜய் போல் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து சொத்தை விற்பனை செய்துள்ளனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலவிஜய் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளார்
புகாரை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு போலீசார் கட்டதேவன், ஈஸ்வரன் மற்றும் அப்போதைய பெரியகுளம் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், சார் பதிவாளர் ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்ற சிறப்பு ஆய்வாளர்கள் அம்மாவாசி, பாண்டியராஜன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் புகார் தெரிவித்து சுமார் 1 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட பாலவிஜய் புகார் தெரிவித்துள்ளார்
பழனி முருகன் கோயில் சொந்தமான நிலத்தினை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது கடந்த ஆண்டே தான் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்த நிலையில் நடவடிக்கை எடுக்காததால் பல்வேறு முறைகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தார்
முறைகேடாக பத்திரப்பதிவு செய்து தனது சொத்தை விற்பனை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது நிலத்தை மீட்டு தர வேண்டும் பாலவிஜய் கோரிக்கை வைத்துள்ளார்


