செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்
புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்த நிலையில் கடந்த ஆட்சியில் அங்கன்வாடி மையம் கட்டிடம் புதிதாக கட்ட அரசு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர்கள் கட்டிடம் கட்டும் பணியினை செய்து வந்தனர்.
இதனை தொடர்ந்து வேலைக்கான தொகையை அரசு தரப்பில் விடுவிக்கப்படாத நிலையில் பாதியிலேயே கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது
புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணியின் காரணமாக புதிதாக அங்கன்வாடி மையம் வளத்தி சாலையில் வாடகை வீட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது
மேல்மலையனூர் பகுதியில் சிறுதலைபூண்டி சாலை அக்னி குளக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் இவ்மையத்தில் பயின்று வருவதால் இவர்கள் குடியிருப்புக்கும் புதிய அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கும் பகுதிக்கும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
40 குழந்தைகளை கொண்ட அங்கன்வாடி மையத்திற்கு தற்போது 8 குழந்தைகள் மட்டுமே வருவதால் பெற்றோர்கள் அங்கன்வாடி புதிய கட்டிடத்தை உடனடியாக திறந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
சிறிய அளவிலான வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுவதால் குழந்தைகள் காற்றோட்டமின்றியும் போதிய வெளிச்சமின்றி இருப்பதால் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே அரசு புதிதாக கட்டியுள்ள அங்கன்வாடி மையத்தினை உடனடியாக விரைந்து கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
இச்சம்பவம் குறித்து மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்பந்ததாரர்களுக்கு பொறியாளர்கள் நீண்ட நாட்களாக கட்டிட தொகையை விடுவிக்காததால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையிலேயே கடும் வாக்குவாதத்தில ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது
இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணக்குமார் விரைந்து கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் ஒப்பதாரர்கள் கலைந்து சென்றனர்.


