in

ஊதிய உயர்வு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“தாயுமானவர் திட்டத்தில்” ரேஷன் பொருட்களை பெற முடியாத முதியவர்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்கும் வகையில் திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நிபந்தனையுடன் வழங்கப்பட்ட ஊதிய உயர்வை தளர்த்தி, பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் புதிய ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

பணி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஓய்வு பெரும் நாளில் முழு நிதி பலன்கள் வழங்க வேண்டும் என்றும் 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்ற பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்..

வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடம் மாறுதல் நடைமுறையினை எளிமைப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு இணையாக கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் பணிக்கொடை 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: எஸ்.ஐ. மைத்துனர் மீது புகார்

போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற வீ த லிடர்ஸ் அமைப்பினர்