பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: எஸ்.ஐ. மைத்துனர் மீது புகார்
பாதையை ஆக்கிரமித்து வழிவிடாமல் மறித்ததோடு சுத்தியலை கொண்டு தாக்க முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஆண்டிபட்டி சார்பு ஆய்வாளரின் மைத்துனர் மீது புகார்.

சார்பு ஆய்வாளரின் தலையீட்டால் அவரின் மைத்துனர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆண்டிபட்டி காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு.
நேற்று கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய காவலர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் இன்று ஆண்டிபட்டி சார்பு ஆய்வாளர் மீது அதிகார துஷ்பிரயோக புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் சித்ரா தம்பதியினர். இவர்கள் அதே ஊரில் கடந்த 2013 ஆம் ஆண்டு இடம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது வீட்டு தெருவில் குடியிருக்கும் ஆண்டிப்பட்டி பகுதியில் பணிபுரியும் காவல்துறை சார்பு ஆய்வாளர் சந்திரன் என்பவரின் மைத்துனரான சென்றாயபெருமாள் என்பவர் இந்த தம்பதியினர் வீட்டிற்கு செல்லும் பொதுபாதையை கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது பெயரிற்கு போலியாக பத்திரப்பதிவு செய்து அந்த பாதையை அடைத்து மறித்து வைத்துள்ளார்.
இதனால் பாலசுப்பிரமணியன் தனது வீட்டிற்கு செல்ல பாதை இல்லாமல் தவித்து வந்த நிலையில் அருகில் உள்ள நடைபாதையை மட்டுமே மாற்று வழியாக பயன்படுத்தி வந்தார்.
இதுகுறித்து கடந்த ஓராண்டாக தேனி மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆண்டிபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் சந்திரன் என்பவரின் மைத்துனர் என்பதால் அவரது தலையீட்டின் பேரில் இதுவரை புகார் பெற்றுக் கொண்டதற்கான புகார் மனு கூட தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவிக்கும் பாலசுப்ரமணியம் சித்ரா தம்பதியினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தை கீழே விழுந்து அடிபட்டு காயம்பட்டபோது ஆம்புலன்ஸ் வீட்டுக்கு வருவதற்கு கூட அனுமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூட முடியவில்லை என்றும்
தாங்களே குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு தற்போது மாற்று பாதையாக பயன்படுத்தும் நடைபாதை வழியாக ஓடிச்சென்று குழந்தையை காப்பாற்றியதாகவும் மேலும் இதே பாதை வழியாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அடைத்துள்ள பாதையை திரும்பத் திறக்கக் கூறியபோது பொதுபாதையை அடைத்து வைத்திருக்கும் சென்றாயப்பெருமாள்
தனது மைத்துனர் சார்பு ஆய்வாளர் சந்திரன் தூண்டுதலின் பேரில் சுத்தியலை கையில் எடுத்துக்கொண்டு தங்களை தாக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அங்கிருந்து தப்பி வந்து அதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்திலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் தற்போதுவரை இதுகுறித்து விசாரிக்க கூட இல்லை என்றும் புகார் பெற்றுக் கொண்டதற்கான ரசீது கூட வழங்கவில்லை என்றும் கண்ணீர் மல்க புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து தற்போதைய தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தனிபிரிவிற்கும் புகார் அளித்துள்ள நிலையில் எனவே தமிழக அரசு தங்களது விசயத்தில் தலையிட்டு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து அடைக்கப்பட்டுள்ள பாதையை திறந்துவிட வேண்டும் என்றும் ஓராண்டாக தங்களது புகார் குறித்து நடவடிக்கை எடுக்காதவர்கள் மீதும் இதற்கு உதவியாக இருந்த சார்பு ஆய்வாளர் சந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் கோவை மாவட்டம் துடியலூர் காவல்நிலைய காவலர் மீது எழுந்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்.
தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சார்பு ஆய்வாளர் மீது எழுந்துள்ள அதிகார துஷ்பிரயோக புகார் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


