in

திரைப்பட படபிடிப்பில் முறையான ஊதியம் வழங்கபடவில்லையா? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு


Watch – YouTube Click

திரைப்பட படபிடிப்பில் முறையான ஊதியம் வழங்கபடவில்லையா? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

 

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் காமெடி நடிகர் சூரி நடிக்கும் விடுதலை -2 படத்தில் நடித்த துணை நடிகர்களுக்கு முறையான ஊதியம் வழங்கபடவில்லையா?- சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கம் செய்து நடிகர் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியான விடுதலை ஒன்று திரைப்படமானது வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் விடுதலை – 2 படப்பிடிப்பானது தற்போது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் மீதமுள்ள காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வரும் நிலையில், இந்த படத்தின் காட்சிகள் தற்போது தென்காசி சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடுதலை 2 படத்தில் நடிப்பதற்காக துணை நடிகர்களை மதுரையிலிருந்து சிலர் அழைத்து வந்த நிலையில், அந்த படப்பிடிப்பில் நடித்த துணை நடிகர்களுக்கு பேசிய ஊதிய வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் தென்காசி ரயில் நிலையம் முன்பு மிகுந்த சத்தத்துடன் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்காததை கண்டித்து பிரச்சனையில் ஈடுபட்ட நிலையில், தாங்கள் விடுதலை – 2 படத்தில் நடிக்க வந்ததாகவும், தங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 விதம் சம்பளம் பேசி தங்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல் ரூ.350 கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் பிரச்சனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைகளில் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

டி20 இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ

கொடைக்கானல் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த தமிழக முதல்வர்