in

அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

 

அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கிராம பெண்களிடம் ஏமாற்றியவரை கைது செய்யக் கோரி பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள மணல்மேடு நடுதிட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வேலை செய்வது போல் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டி உள்ளார்.

இவர் கிராம பகுதிகளில் உள்ள பெண்களிடம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சமையல் துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகளில் வேலையில் சேர்த்து விடுவதாக சுமார் 20 பெண்களிடம் ரூ 15 ஆயிரம் பெற்று உள்ளார்.

ஆனால் இவர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி உள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சினேஹா ப்ரியாவிடம் பாதிக்கபட்ட பெண்களுடன் வந்து புகார் அளித்தனர்.

What do you think?

ஜனநாயகம் ரிலீஸ் ஆஃபர்! மொபைல் ஷோரூமில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சாலை வசதி கேட்டு ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட்டம்