சாலை வசதி கேட்டு ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட்டம்
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆடு, மாடு, பாத்திரங்களுடன் கிராமமக்கள் குடியேறும் போராட்டம் ; சாலை வசதி கேட்டு போராட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செங்குறிச்சி ஊராட்சியில் உள்ள அத்திமடைபுரத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 2- கீ.மி செல்வதற்கு சாலை வசதி செய்து தர மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலம் முன் பகுதியில் ஆடு மாடு பாத்திரங்களுடன் நடந்த வந்த தமிழர் தேசம் கட்சியினர் மற்றும் அத்திமடைபுரத்து கிராம மக்கள் வந்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக சாலை வசதி அனைத்து தர கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் பானுலெட்சுமி,
வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சாலை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


