‘ஜனநாயகன்’ வெளியீடு: செஞ்சியில் உற்சாகக் கொண்டாட்டம்
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குணசரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியினர் பட்டாசு வெடித்து திரைப்படத்தின் வெளியீட்டை வரவேற்றனர்.
மேலும், விஜயின் விளம்பர பேனருக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, விஜயின் 69-வது திரைப்படத்தை குறிக்கும் வகையில் 69 தேங்காய்களை உடைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு திரைப்படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம் அப்பகுதியில் பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


