in

 நாகையில் 20 கிராம மீனவர்கள் வேலைநிறுத்தம்


Watch – YouTube Click

 நாகையில் 20 கிராம மீனவர்கள் வேலைநிறுத்தம்

 

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் சிவநேசசெல்வம், காலத்திநாதன் ஆகியோர் கீச்சாங்குப்பம் விசைப்படகு மீனவர்களால் நடுக்கடலில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் நேற்று கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 20 கிராம பைபர் படகு மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பைபர் படகு மீனவர்கள், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு இரண்டு உயிரை பறித்த கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 28 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

மேலும், பைபர் படகு மீனவர்களுக்கு கடலில் உரிய பாதுகாப்பு வழங்கி, அடித்தட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இழுவைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடை செய்யவேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

அதனை தொடர்ந்து இன்று முதல் செருதூர் முதல் விழுந்தமாவடி, வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, புஷ்பவனம் ஆற்காட்டு துறை, கோடியக்கரை வரை சுமார் 20 மீனவர் கிராமத்தை சேர்ந்த சுமார் 4000 பைபர் படகுகள் மற்றும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

121 பெண்கள் பக்தி பாடல்களுக்கு கோலாட்டம் ஆடியபடி விடிய விடிய கிரிவலம்

 பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம்