in

புதுச்சேரி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி


Watch – YouTube Click

புதுச்சேரி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி

 

புதுச்சேரி காரைக்காலில்12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.26 சதவீதம் குறைவு.

தமிழக அரசின் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 155 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 12 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதினார்கள்.

இதற்கான முடிவை தமிழக அரசு இன்று வெளியிட்டதை தொடர்ந்து புதுச்சேரி மாநில பிளஸ் டூ தேர்வு முடிவுகள் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் வெளியானது.

அதன்படி இந்தாண்டு பிளஸ்டூ தேர்வில் 92.41% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 12,948 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 0.26 சதவீதம் குறைவு, அரசு பள்ளிகளை பொருத்தவரை 85.35% சதவீதம் ஆகும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 55 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அதிகப்படியாக கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 165 மாணவர்கள் 100-க்கு 100 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் மொழியில் யாரும் 100க்கு 100 மதிப்பெண் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 526 மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படத்துள்ளனர் மேலும்
புதுச்சேரி காரைக்காலில் அரசு பள்ளிகளில் மட்டும் 20 மாணவ மாணவிகள் 100க்கு 100 பெற்று சாதனை படைத்துள்ளனர்.

குளுனி பள்ளி மாணவி ஸ்ரேயா 600 க்கு 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார் அதன்படி பொருளியல் 100 வணிகவியல் 100 பிரெஞ்சு 100 கணக்குப்பதிவியல் 99 ஆங்கிலம் 98 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாணவி கூறும் போது…

கடவுள் என்னை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் தொடர்ந்து அவரின் ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு உணடு நம்பிக்கையுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்னுடைய எண்ணமே எம்பிஏ படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்தார் நம்பிக்கையுடன் படித்ததாலே இந்த மதிப்பெண்களை பெற்றதாக அவர் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

செங்கம் அருகே விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்பு தானம் மாவட்ட ஆட்சியர் மரியாதை

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் ஓட்டத்துக்கு இந்திய அணிகள் தகுதி தமிழக வீரர்கள் அசத்தல்