in

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தெருக்கூத்து நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு


Watch – YouTube Click

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தெருக்கூத்து நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சி சார்பாக பாராளுமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் நேர்மையான வாக்களிப்போம், வாக்கு பதிவு செய்ய தயாராகுவோம், ஜனநாயக கடமை ஆற்றுவோம் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரும் தேர்தல், மாவட்ட தேர்தல் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் தலைமையில் தெருக்கூத்து நாடக கலைஞர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தெருக்கூத்து கலைஞர்களின் பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் என் வாக்கு என் உரிமை என்ற பதாகை அருகில் நின்று மாவட்டத் தேர்தல் அலுவலருமான, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நின்று வாக்களிக்கும் ஆள்காட்டி விரலைக் உயர்த்தி காட்டி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது காவல் நிலையத்தில் புகார்

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்களுடைய விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது