in ,

கனமழை காரணமாக மூழ்கிய தரைப்பாலம்


Watch – YouTube Click

கனமழை காரணமாக மூழ்கிய தரைப்பாலம்

 

கனமழை காரணமாக மூழ்கிய தரைப்பாலம். 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராஜபாளையம் அருகே வரகுண ராமபுரத்தில் இருந்து தேவராயன்பட்டி செல்லக்கூடிய வழியில் இருந்த தரைப்பாலம் மற்றும் கன்னித்தேவன் பட்டியில் இருந்து கோபாலபுரம் செல்லும் வழியில் இருந்த இரண்டு தரைப்பாலங்களும் தற்போது, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3.72 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலமாக கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே அந்த வழியாக பொது மக்கள் மற்றும் லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்காக பக்கவாட்டில் இரண்டு தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கோபாலபுரம் பாலம் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில், மற்றொரு பாலத்திற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் குறிச்சியார்பட்டி கண்மாய் நிரம்பி வெளியேறும் கலிங்கல் தண்ணீர், விவசாய நிலத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் ஆங்காங்கே உள்ள ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாமிநாதபுரம், ஆலங்குளம் வழியாக வெம்பக்கோட்டை அணைக்கு வெள்ளம் போல செல்கிறது.

இந்த தண்ணீர் தற்போது பாலத்திற்காக அமைக்கப்பட்டிருந்த 2 தற்காலிக சாலைகளையும் மூழ்கடித்து செல்வதால், சத்திரப்பட்டியில் இருந்து நத்தம்பட்டி, ஜமீன் நத்தம்பட்டி, தேவராயன் பட்டி, கோபாலபுரம், வடகரை, மேட்டு வடகரை, தென்கரை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியும்,

சிவலிங்கபுரத்தில் இருந்து கன்னித்தேவன் பட்டி வழியாக வரகுணராமபுரம், பேயம்பட்டி, எம்ஜிஆர் நகர் காலனி, அட்டைமில், கீழராஜகுலராமன் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் 10 முதல் 15 கிமீ வரை சுற்றி செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இரண்டு வழிகளிலும் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடித்து, தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகை செய்ய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை வேண்டும் என கிராம மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா

அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா