in

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம்


Watch – YouTube Click

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம்

 

நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவிருக்கிறது. அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை சார்பில் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக கார்த்திகா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கார்த்திகா தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். கார்த்திகா கடந்த ஆறு வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வருகிறார். மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் இக்பால்தீன் மாவட்ட தலைவர் பால்ராஜ் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வினோதினி மண்டல செயலாளர் அப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கும் கார்த்திகா நாகை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர் அறிமுக கலந்தாய்வுக் கூட்டம் நாங்கள் புறவழிச்சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் கார்த்திகா நான் வெற்றி பெற்றால் மீனவர்களுக்கு எதிரான மீன் வள சட்டங்களை எதிர்ப்பது காவிரி நதி நீர் உரிமை முல்லை பெரியாற்று உரிமை கச்சத் தீவை மீட் பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன்.

என் ஐ ஏ போன்று நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காமல் முடக்க மத்திய அரசு முயச்சிக்கிறது.அந்த சின்னத்தை கேட்டு பெறுவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளோம். ஒரு சமயம் வேறு சின்னம் ஒதுக்கினாலும் அதை நாங்கள் ஒரே நாளில் மக்களிடம் எடுத்துச் சென்று சேர்ப்போம் பொதுவுடமை கட்சிகளின் கோட்டையாக இருக்கும் இந்த தொகுதியை இந்த தேர்தலில் புலிகளின் கோட்டையாக மாற்றுவோம் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

அச்சிறுபாக்கம் திரிநேத்ரதாரி யோகா பயிற்சி ரதசப்தமியையொட்டி சூரிய நமஸ்காரம் போட்டி

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு