புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு எப்போது…? பதிலளிக்காமல் சென்ற ஆளுநர்…
தொண்டு நிறுவனம் சார்பில் “காக்கி உடை காவலர்கள்”- காவலர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கும் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவலர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
காவல்துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங், உதவி இயக்குனர் சத்தியசுந்தரம், காவல்துறை உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழா முடித்து வெளியே வந்த துணைநிலை ஆளுநர் கைலாசநாதனிடம்,
புதுச்சேரி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காதது ஏன் ….?
எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்..


