காவல்துறையை பாராட்டி விருது வழங்கும் நைட்ஸ் இன் காக்கி – 2026 நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்து கொண்டு காவலர்களை பாராட்டினார்.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல் துறையினரை கவுரவித்து, பாராட்டி, புதுச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் 167, சார்பில், ‘நைட்ஸ் இன் காக்கி -2026′ விருது வழங்கும் விழா, நுாறடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
வெங்கட்ரமணி வர வேற்றார். சிறப்பு விருந்தி னராக கவர்னர் கைலாஷ் நாதன் கலந்து கொண்டு காவல் துறையை சேர்ந்த 156 காவலர்களுக்கு விருது வழங்கி பாராட்டி, பேசினார்.
விழாவில், ஜான்குமார் எம்.எல்.ஏ., டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஜ.ஜி, சத்தியசுந்தரம், அகில இந்திய ரவுண்ட் டேபிள் தலைவர் சஞ்சீவி, புதுச் சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் -167 தலைவர் ராமராஜன், செண்பகா கார்ஸ் நிர்வாக இயக்கு நர் அசோகன், பாண்டிச். சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் 167 உறுப்பி னர்கள் பாலாஜி, அன்புசூர்யா, திலீப், சுரேஷ் பட்டேல், முகேஷ், ரூபன், மோத்திகுமார், அரவிந்த், விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரியூர் வெங்கடேஸ்வரா மருத் துவக் கல்லூரி மற் றும் சேர்மன் மருத்துவமனை ராமச்சந்திரன் புதுச்சேரியில் உள்ள 2,500 ஆண் மற்றும் பெண் போலீசாருக்கு இலவச மருத்துவ பரி சோதனை செய்து கொள்’ வதற்கான அடையாள அட்டை வழங்கினார்.
இதன் மூலம் போலீ சார் மேமோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,
எக்ஸ்ரே, ரத்தப் பரிசோ தனை உள்ளிட்ட முழு உடல் சுகாதார பரிசோ தனைகள் அனைத்தும் இலவசமாக எடுத்து : கொள்ளலாம்.
ஏற்பாடுகளை பாண்டிச் சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் 167 நிர்வாகிகள் செய்திருந்தனர்.


