போக்குவரத்து நெரிசல்: சட்டப்பேரவைக்கு நடந்தே சென்ற எம்.எல்.ஏ…
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்: சட்டப்பேரவைக்கு நடந்தே சென்ற திமுக எம்.எல்.ஏ…
புதுச்சேரி நகரப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கடும் போக்குவரத்து நெரிசலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ராஜ்பவன் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன், தனது வீட்டிலிருந்து சட்டப்பேரவைக்கு காரில் செல்லாமல் நடந்தே சென்றார்.
மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் பா. கண்ணனின் மகனான விக்னேஷ் கண்ணன், ராஜ்பவன் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

“காரில் செல்வதைவிட நடந்தே சென்றால் சட்டப்பேரவைக்கு விரைவாகச் செல்ல முடிகிறது” எனக் குறிப்பிட்ட அவர், நகரில் பொதுமக்கள் தினமும் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிரமத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே நடந்தே சென்றதாக தெரிவித்தார்.
புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


