in

மாரடைப்பு காரணமாக நடிகர் டானியல் பாலாஜி உயிரிழந்தார்


Watch – YouTube Click

மாரடைப்பு காரணமாக நடிகர் டானியல் பாலாஜி உயிரிழந்தார்

மாரடைப்பு காரணமாக நடிகர் டானியல் பாலாஜி நேற்று உயிரிழந்தார். சன் டிவியில் ‘சித்தி’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் டானியல் பாலாஜி.

அதன் பிறகு ‘ஏப்ரல் மாதம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பாலாஜி என்ற பெயரை டேனியல் பாலாஜி என்று மாற்றியவர் இயக்குனர் சுந்தர் சி.

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, வடசென்னை, பிகில், போன்ற படங்களில் வில்லனாக அருமையாக நடித்திருப்பார்.

திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி நேற்று அவரது வீட்டில் இருக்கும் பொழுது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது உடனே அவரை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

சிகிச்சை பலனளிக்காததற்கு காரணம் அவர் மருத்துவமனைக்கு வரும்போதே உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் காரணமாம்.

இவர் மரணம் ஒட்டுமொத்த தமிழக திரை துறையையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . இவரது உடல் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

திருவாரூர் சுற்றுவட்டார பகுதியில் உணரப்பட்ட பலத்த சத்தம் அச்சத்தில் பொதுமக்கள்

டேனியல் பாலாஜியின் மரணத்திற்கு இதுதான் காரணம்