in

நன்றி தெரிவித்த லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

நன்றி தெரிவித்த லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்

 

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியது.

மாண்புமிகு துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை

  • மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
  • முதலாவதாக, என்னை வழிநடத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கும், என்னை ஈன்ற பெற்றோர்களுக்கும், எனது பாசத்துக்குரிய குடும்பத்திற்கும், அன்பு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • மக்கள் பணியில் என்னோடு நிற்கும் லட்சிய ஜனநாயக கட்சி (LJK) நிர்வாகிகள், தொண்டர்கள், நமது தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், நமது தேசத்தை வழிநடத்தும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஜி அவர்களுக்கும் மற்றும் தேசியத் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • அதேபோல், நமது புதுச்சேரியின் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி ஐயா அவர்களுக்கும், எனக்காகத் தனது தொகுதியை விட்டுக்கொடுத்து என்னை வெற்றிபெறச் செய்யப் பேருதவி புரிந்த எனது பாசத்திற்குரிய ஜான் குமார் அண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
  • என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெறச் செய்து இந்த மாமன்றத்திற்கு அனுப்பி வைத்த என் அன்பிற்குரிய காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கும், இந்த அவையில் உள்ளிருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

 

           “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 

           வகுத்தலும் வல்ல தரசு

 

என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, வருவாயைப் பெருக்கி, நாட்டைப் பாதுகாத்து, மக்கள் நலனுக்காக நிதியைச் சரியாகப் பிரித்துச் செலவிடும் ஒரு சிறந்த நல்லாட்சிக்கு வழிகாட்டியாக மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்களின் உரை இந்த அவையில் அமைந்திருக்கிறது.

  • நமது மாநில வளர்ச்சி விகிதம் (GSDP) -2.21% இலிருந்து12% ஆக உயர்ந்துள்ளது.
  • மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ₹3,44,926 ஆக அதிகரித்துள்ளது.
  • அரசின் மொத்த வரவு ₹13,397 கோடியாக உயர்ந்திருக்கிறது.
  • கட்டமைப்புப் பணிகளுக்கான மூலதனச் செலவு ₹765 கோடி உயர்ந்துள்ளது.
  • உள்கட்டமைப்பில், பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் ₹4,800 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
  • போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடேசன் நகர் முதல் முள்ளோடை வரை மேம்பாலப் பணிகளும், பழைய துறைமுகத்தில் நியூ ஃபெர்ரி டெர்மினல் (New Ferry Terminal) அமைக்கப்பட உள்ளன.
  • சுற்றுலாவை மேம்படுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரிக்கமேடு பகுதியும், கடற்கரையை அழகுபடுத்தும் பாண்டி நெக்லஸ் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றன.
  • ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ₹4,750 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்ட வசதியும், காரசூர் மற்றும் தட்டாஞ்சாவடி தொழில் மண்டலங்கள் மூலம் 70,000 வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்படுகின்றன.

What do you think?

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..