in

கோடை விடுமுறைக்கு பின் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு..

கோடை விடுமுறைக்கு பின் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு..

 

புதுச்சேரியில் தொடக்க நிலை-233, நடுநிலை-47, உயர்நிலை-68, மேல்நிலை-62, சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி-1 என மொத்தமாக 410 பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதுதவிர, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்-33, தனியார் பள்ளிகள்-318 உள்ளன.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இப்பள்ளியில் கடந்த மார்ச் மாதத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.

தொடர்ந்து, ஏப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 2026-27ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடைபெற்று வந்தன. கோடை வெயில் காரணமாக, ஏப்.27ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, ஜூன் 1ம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையொட்டி பள்ளி வளாகம், வகுப்பை, கழிவறைகளை சீரமைத்து சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் கோடை விடுமுறை ஜூன் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு ஜூன் 4-ம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரியிலும் பள்ளி திறப்பை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர் நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஜூன் 3 வரை கோடை விடுமுறை நீடிக்கப்பட்டு,

4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றனர்.

இதனால் நகரப் பகுதியில் முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. முதல் நாளான இன்று அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

What do you think?

திடீர் ரைடில் ஈடுபட்ட அதிரடி காட்டும் எஸ் பி….

வேளாங்கண்ணி அருகே நள்ளிரவில் மண் திருட்டு