புதுச்சேரி கடற்கரையில் பிரான்ஸ் தேசிய தின வானவேடிக்கை; பொதுமக்கள் உற்சாகம்
கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து, மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தை நினைவு கூறும்வகையில் இன்று காலை புதுச்சேரி கடற்கரையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்த பிரான்ஸ் நாட்டிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட இந்திய வீரரகள் மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பிரெஞ்சு தூதரக வாயில் மற்றும் கடற்கரைச்சாலையில் வண்ணமயமான வாணவேடிக்கை நடைபெற்றது. 20 நிமிடம் வரை நடைபெற்ற இந்த வான வேடிக்கை நிகழ்ச்சியில் புதுச்சேரியில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான கலந்துகொண்டு வானவேடிக்கையை ரசித்தனர்.


