in

தேர்தலில் வெற்றி தந்த மக்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார் சார்லஸ் மார்டின் Charles Martin

தேர்தலில் மகத்தான வெற்றி-வீடு வீடாகச் சென்று மக்களுக்கு சால்வை அணிவித்து லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நன்றி தெரிவித்தார்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், நிகழ்வில் பங்கேற்றார். முதற்கட்டமாக சாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்து விநாயகர், சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் தேவஸ்தானங்களில் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பழைய சாரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சால்வை அணிவித்து, சர்க்கரை மற்றும் நாட்டு சர்க்கரை வழங்கி, தமக்கு அளித்த மகத்தான ஆதரவிற்காக நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார், லட்சிய ஜனநாயகக் கட்சியின் செயலாளர் ரவி ராஜாராம், காமராஜர் நகர் தொகுதி தலைவர் கோகுல் கண்ணன், ரெயின்போ நகர் தொகுதி பொறுப்பாளர் என்.ஆர். சுரேஷ் மற்றும் பூத் தலைவர்கள் சுகுமாரன், சுவாமிநாதன், கோபி, ரமேஷ், முருகானந்தம், அஜய், வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

What do you think?

நாகை ONGC நிறுவனத்தை கண்டித்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!​

புதுவை காமராஜ் சாலை உப்பனாறு வாய்க்கால் பணிகளை காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் ஆய்வு