in

கல் நகர் மற்றும் பாவாஜி நகர் பகுதியில் காவல் துறையினர் அதிரடி சோதனை……

கல் நகர் மற்றும் பாவாஜி நகர் பகுதியில் காவல் துறையினர் அதிரடி சோதனை……

கஞ்சா மற்றும் கள்ள சந்தையில் மது பானங்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் கஞ்சா மற்றும் கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பது நாளுக்கு நாள் தொடர் கதையாக இருந்து வருகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக கஞ்சா மற்றும் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைக்கின்றது.

இதன் அடிப்படையில் நள்ளிரவு முதல் காவல் துறையினர் மோப்பநாய் பைரவா மூலம் திருவண்ணாமலை நகரில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கல் நகர், சமுத்திரம் காலனி, பாவாஜி நகர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் கள்ள சந்தையில் மதுபானம் விற்றதாக மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒன்றை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று காவல்துறையினர் அறிவித்து வந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பனை முழுவதுமாக நிறுத்தாவிட்டால் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

What do you think?

பணி நிரந்தரம் கோரி டவர் மீது ஏறிய பகுதி நேர ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்