in

திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்படும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், மகிலா நீதிமன்றம், போஸ்கோ சிறப்பு நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், உள்ளிட்ட 16 நீதிமன்றம் சேர்த்து ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் வந்த குறுஞ்செய்தியை தொடர்ந்து தற்போது துப்பறியும் மோப்பநாய் தென்றல் உதவியோடு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் முகமை வளாகம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை குறிப்பிடத்தக்கது

.இந்நிலையில் ஒரே மாதத்தில் மீண்டும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்ற மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறுஞ்செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

கல் நகர் மற்றும் பாவாஜி நகர் பகுதியில் காவல் துறையினர் அதிரடி சோதனை……

வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான்களை மீட்டு மீண்டும் வனத்திற்குள் அனுப்பிய வனத்துறையினர்.