வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான்களை மீட்டு மீண்டும் வனத்திற்குள் அனுப்பிய வனத்துறையினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையதில் போக்குவரத்து மிகுந்த கோவை சாலையில் வணிக வளாக கட்டிடத்தில் மான் ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் வலை வீசி மானை பிடிக்க முயன்றனர்.
ஆனால் புள்ளிமான் கட்டடத்தின் முதல் தளம் உட்பட எல்லா பகுதிகளுக்கும் அங்கும் இங்கும் ஓடியதுஇதை அடுத்து கட்டடத்தின் நுழைவாயிலில் வலையை விரித்து புள்ளி மான் அதன் வழியாக வரும் பொழுது பிடிப்பதற்கு வனத்துறையினர் முயற்சி செய்தனர்
ஆனால் வளையில் சிக்கிய புள்ளிமான் வளையிலிருந்து இருந்து தப்பித்து சுற்றுச்சுவரை தாண்டி குதித்து சாலைக்கு ஓடியது, இந்நிலையில் மேலும் ஒரு மான் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஒரு மானை மட்டும் மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பி நிலையில் மற்றொரு மான் தானே வனப்பகுதியை நோக்கி சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர் .
வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் ஏற்பட்டு மான்கள் ஊருக்குள் வந்ததாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளை தொடர்ந்து நிரப்பி வைக்க வேண்டும் என்றும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


