சிதம்பரம் நடராஜருக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ளதங்க அபயஹஸ்தம் அணிவிக்கப்பட்டது பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
சிதம்பரம், ஜுன் 16: சிதம்பரம் நடராஜர் கோயில் உற்சவமூர்த்தியான சோமாஸ்கந்தருக்குரூம் 30 லட்சம் மதிப்பிலான தங்க பவள,நவரத்தின கற்களால் ஆன அபயஹஸ்த்தம் அணிவிக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ நடாராஜமூர்த்தியின் ப்ரிதிநிதியாக விளங்கும் உற்சவ மூர்த்தியான ஸ்ரீசிவானந்தநாயகி ஸமேத ஸ்ரீ ஸோமாஸ்கந்தருக்கு ஆனி திருமஞ்சன தரிசன மஹோதஸவ தினமான 3 ஆம் நாளான திங்கள்கிழமை மாலை பெயர் வெளியிட விரும்பாதபக்தர் ஒருவரால் அவரது கட்டளை தீட்சதர் ஆர்.பாஸ்கர் தீட்சிதர் மூலம் கோயில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் ஜெயசூர்யா தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பக்தர் ஒருவரால் ரூ. 30 லட்சம் மதிப்பிலான அன்பளிப்பாக வழங்கப்பட்ட பவழம், புஷ்பராகம் பச்சைக் கற்கல் பதித்த இஷைப்பு தங்க அபயஹஸ்தம் கவசம் திங்கள் கிழமை மாலை சோமஸ்கந்தருக்கு அனுபவிக்கப்பட்டது.
இதன் மொத்த எடை சுமார் 195 கிராம் ஆகும்.சிதம்பரம் நடராஜர் ஆலய ஆனித் திருமஞ்சன தேரோட்டம் தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற இருக்கின்ற நிலையில் கொடி ஏற்ற முடிந்து இன்று மூன்றாம் நாளான இன்று சோம ஸ்கந்தருக்கு இந்த சிறப்பு நவரத்தின கற்கள் பொறிக்கப்பட்ட தங்க அபேகஸ்தம் பொருத்தப்பட்டு ஸ்ரீ சுவாமி வீதி உலா புறப்பட்டு சென்றது …


