in

புவனகிரியில் 209வது தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது

புவனகிரி கோட்டைமேட்டு தெரு கிளியாச்சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலய 209 ம் ஆண்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி கோட்டை மேட்டு தெரு கிளியச்சாவடி பகுதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் 209 ம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும் மகாபாரத இதிகாசத்தை மையப்படுத்தி பல்வேறு நிகழ்வுகள் வழிபாடுகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வந்தது இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் சுவேதா நதிக்கரையிலிருந்து காப்பு கட்டிய பக்தர்களுடன் ஊரின் பல்வேறு வீதிகளில் ஊர்வலமாக வந்து மேள தாளங்கள் முழங்க தீ குண்டத்தில் இறங்கியது இதனை தொடர்ந்து .

காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்தனர் இதில் காப்பு கட்டிய பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தீ மதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர் . இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர்

What do you think?

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

பாண்டிச்சேரி இளைஞர்கள் இருவர் சாலை விபத்தில் பலி