in

அச்சத்தை உடைத்த இருளர் குழந்தைகள்: மைக்கில் பேசி அசத்திய நெகிழ்ச்சி தருணம்

அச்சத்தோடு பயிலும் பழங்குடியின இருளர் குழந்தைகளை ஊக்கப்படுத்தி தைரியமாக பொதுமக்கள் மத்தியில் மைக்கை பிடித்து பேச வைத்த காவல் ஆய்வாளர், மருத்துவர், போலீஸ், டீச்சர், ஆகுவேன் என கூறிய குழந்தைகள் சிதம்பரம் அருகே நெகிழ்ச்சி சம்பவம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை சண்முகா நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட பழங்குடி இன இருளர் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு கட்டாயமாக ஆதார் கார்டு தேவை உள்ளதால் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைந்து வரும் சூழல்நிலைக்கு வந்தது நிலவி வந்தது.

இதனை கவனத்தில் கொண்ட நண்பர்களுக்குள் 96 என்ற முன்னாள் மாணவர்கள் அவர்களுக்கு உதவி செய்ய தானாக முன் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்திற்கு சென்ற முன்னாள் மாணவர்கள் அவர்களுக்கு ஆதார் கார்டு வழங்க வருவாய் துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் வருகை புரிந்தார்.

அங்கு அரசு பள்ளியில் படிக்கும் சுமார் 40 பள்ளி குழந்தைகளுக்கு செருப்பு கல்வி பயில தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் தயக்கத்தில் அச்சத்தோடு இருந்த பழங்குடியின இருளர் குழந்தைகளை ஊக்கப்படுத்தி தைரியமாக பொதுமக்கள் மத்தியில் மைக்கை பிடித்து பேச வைத்தார் அப்போது குழந்தைகள் பேசுகையில் நான் மருத்துவராக ஆவேன் நான் காவலராக வருவேன் நான் டீச்சராக வருவேன் என அவர்களது குழந்தை பேச்சால் கூடியிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

அதனைத் தொடர்ந்து பேசிய காவல் ஆய்வாளர் அம்பேத்கர்
குழந்தைகள் படிக்க தயாராக இருக்கிறார்கள் அவர்களை தடுக்கக்கூடாது தடுத்தால் கண்டிப்பாக சட்டத்தின்படி பெற்றோர்கள் மீது நடவடிக்கை என குழந்தைகளின் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் குழந்தை திருமணம் செய்யக்கூடாது அது கடும் குற்றச் செயலாகும் என பழங்குடியினர் மக்களுக்கு அறிவுரை வழங்கினார் இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

What do you think?

சிதம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து: இளைஞர் தப்பியோட்டம்

கரூர் அடுத்த மல்லம் பாளையம் ஸ்ரீ பட்டத்தரசி பாப்பாத்தி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் ஆண்டு திருவிளக்கு பூஜை