கரூர் அடுத்த மல்லம் பாளையம் ஸ்ரீ பட்டத்தரசி பாப்பாத்தி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் ஆண்டு திருவிளக்கு பூஜை
கரூர் மாவட்டம், வாங்கல் கிராமம், மல்லம்பாளையம், அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி பாப்பாத்தியம்மன், ஸ்ரீ அரசமர கணபதி ஸ்ரீ முருகன் ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ காத்தவராயன் சுவாமிகளின் 5-ம் ஆண்டு பால்குட அபிஷேகம் மற்றும் குத்துவிளக்கு பூஜைமிக விமர்சையாக நேற்று நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வும் பின்னர் மூலவர் ஸ்ரீ பட்டத்தரசி பாப்பாத்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பின்னர் மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு .
பஞ்ச தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது பின்னர் கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை மிக விமர்சையாக நடைபெற்றதுஇதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை சிவாசாரியார்கள் மந்திரங்கள் கூற கூற மிகச் சிறப்பாக செய்திருந்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக மிகச் சிறப்பாக செய்திருந்தன வருகை புரிந்த பக்தர்களுக்கு கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது


