உலகப் புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முத்தங்கிஅலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர்
நாமக்கல் மாநகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில் எதிரே ஸ்ரீ நரசிம்ம சுவாமியை இருகரம் கூப்பி வணங்கி நிற்கும் 18 அடி ஒற்றைகல்லிலால் ஆன உலக புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை முலநட்சத்திரத்தைமுன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டுகாலை 10:30 மணிக்கு வடமாலை சாற்றப்பட்ட பின் பட்டாச்சாரியார்கள் நல்லெண்நெய்காப்பு, பஞ்சாமிர்தம் /பால் தயிர் மஞ்சள் சந்தனம், சொர்ணம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்யப்பட்ட பின் பக்தர்களுக்கு சிறப்பு காட்சியளித்தார் அப்போது மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் தமிழ்நாடு உட்பட பல மாநில, வெளிநாடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வணங்கிச் சென்றனர்.


