in

குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோவில் திருவிளக்கு பூஜை

குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோவில் திருவிளக்கு பூஜை

 

குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் குத்துவிளக்குடன் பங்கேற்று தாலி பாக்கியம் நிலைக்கவும் உலக நன்மைக்காகவும் வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஆனி மாதம் 4-வது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையில் உலக நன்மை வேண்டியும், தாலி பாக்கியம் நிலைக்க வேண்டியும், ஊர் செழிக்கவும், வேண்டிய வரங்கள் கிடைக்கவும் பெண்கள் பங்கேற்று குத்து விளக்கை அம்மனாக பாவித்து புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும் ஆலய அர்ச்சகர்கள் கூறும் மந்திரங்களுக்கு ஏற்ப குங்குமத்தால் திருவிளக்கிற்கு பூஜை வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் விழா ஏற்பாடுகளை குத்தாலம் ஆதிசங்கரர் பேரவை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What do you think?

புதுச்சேரியை இந்தியாவின் முதல் ‘இதயப் பாதுகாப்பு ஒன்றியப் பிரதேசமாக’ உருவாக்கும் முன்னெடுப்பு.”

குத்தாலத்தில், இலவச இருதய மருத்துவ பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிறப்பு முகாம்