திண்டுக்கல்லில் விற்பனைக்காக பதுக்கிய 56 கிலோ கஞ்சா பறிமுதல்: கணவன்- மனைவி உள்ளிட்ட மூன்று பேர் கைது : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி
தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை தலைவிரித்து ஆடும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாரப்பட்டி கிராமத்தில் விற்பனை செய்வதற்காக கணவன் மனைவி ஜெயபால் மற்றும் நந்தினி ஆகிய இருவர் வீட்டில் உள்ள வைக்கப் போரில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 56 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப், மற்றும் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்துள்ளனர் மேலும், இவர்களிடமிருந்து விற்பனைக்காக வாங்கி சென்ற நத்தம்-ஊராளிபட்டி பகுதியைச் சேர்ந்த சையது காட்டு பாவா என்பவரையும் கைது செய்துள்ளனர்,
மேலும் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம் வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆர்டர் செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


