in

நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள்


Watch – YouTube Click

நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள்

 

விருதுநகரில் இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு முற்றுகை போராட்டம்….

கடந்த 19ம் தேதி திங்கட்கிழமை முதல் 9 நாட்களாக சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக 2000க்கும் மேற்பட்டோர் இடைநிலை ஆசிரியர்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதி 311ஐ திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நுங்கம்பாக் கத்தில் பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டதில் ஈடுபட்டு வருகின்ற இடைநிலை ஆசிரியர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததை கண் புத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் இன்று விதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தொடங்கி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு வரை மாவட்ட செயலாளர் சுகுமார், மாவட்ட பொருளாளர் கதிரேசன் தலைமையில்

நூற்றுக்கு மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு முற்றுகை போராட்டத்தி ஈடுபட முயன்றனர்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை சூலக்கரை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர் .

கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

எருதுவிடும் விழாவில் 200 க்கும் மேற்பட்ட காளைகள்

பாஜக எம்எல்ஏக்கள் 15 பேர் சஸ்பெண்ட்