in

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, விவசாயிகள் தற்போது பருத்தியை அறுவடை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நலன்கருதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பருத்தி ஏலம் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்கீழ் இ-நாம் முறையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது.

200-க்கு மேற்பட்ட விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்து விற்பனை கூடத்தில் அடுக்கி வைத்து ஏலம் நடைபெறும்

இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்வார்கள். இந்த வாரத்துக்கான பருத்தி ஏலம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் இன்று விவசாயிகள் எடுத்து வந்த பருத்தி மூட்டைகளை அடுக்க இடமில்லை என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை- கும்பகோணம் பிரதான சாலையில் விற்பனை கூடம் முன்பு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டனர்.கடன் வாங்கி செலவு செய்து விளைவித்த பருத்திக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

What do you think?

செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பி-ஏரியில் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதையில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்

செங்காடு ஊராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு ; கிராம மக்கள் அவதி அடைவதாக புகார்.